நான் படித்த புத்தகங்களைப் பற்றி......

my opinion about the various tamil and english novels i read so far

My Photo
Name:
Location: Madurai, Tamil Nadu, India

Sunday, October 16, 2005

oru puliyamarathin kathai

ஒரு புளியமரத்தின் கதை ( சுந்தர ராமசாமி )


முதன்முறையாக 1966 இல் வெளிவந்து தற்போது ஆறாவது பதிப்பாக வந்துள்ளது ‘ஒரு புளியமரத்தின் கதை’.

ஒரு பெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.

புளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.

புளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை.

புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.


காலச்சுவடு பதிப்பகம்
50 ரூபாய்
157 பக்கங்கள்

4 Comments:

Blogger அன்பு said...

வித்தியாசமான வலைப்பதிவு. (தமிழ்) நூல்களுக்கு மதிப்பீட்டோடு குறிப்பிடுவதை முதல்முறையாகப் பார்ர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

19 October, 2005 01:50  
Blogger Niraj Kumar said...

hi..
i dint understand anything.. though its nice to see your blog.. u can visit mine too..

http://zarinspot.blogspot.com

Regards,
Niraj (if you remember!)

26 October, 2005 20:14  
Blogger Unknown said...

I have search this book in last 3 months but didt get ...

31 August, 2009 22:16  
Blogger கோபி இராசேந்திரன் said...

reading now

17 February, 2014 06:22  

Post a Comment

<< Home

Counter
Counter

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது