நான் படித்த புத்தகங்களைப் பற்றி......

my opinion about the various tamil and english novels i read so far

My Photo
Name:
Location: Madurai, Tamil Nadu, India

Saturday, February 04, 2006

ஸ்ரீ மஹா பக்த விஜயம்

ஸ்ரீ மஹா பக்த விஜயம்
( குகப்ரியை)

தெய்வ பக்தியும் ஆன்ம சிந்தனையுமே இந்திய நாட்டின் தனி சிறப்புகள். அவற்றில் தமிழ்நாட்டிற்கும் பெரும் பங்கு உள்ளது. தமிழகத்திலே பக்திப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களைப் பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம். ஆனால் தமிழகம் அல்லாத மற்ற இடங்களின் வாழ்ந்தோரைப் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களைப் பற்றிக் கூறுவதே “ஸ்ரீ மஹா பக்த விஜயம்”
எனும் இந்நூலாகும்.


நாமக்கல் கவிஞரின் முன்னுரையோடு தொடங்கும் இந்நூலில் துளசிதாஸர், மீராபாய், சக்குபாய் போன்ற 82 வட இந்திய, கடவுள் அருள் பெற்ற புலவர்களின் வாழ்க்கையையும் பாடல்களையும் காணலாம்.


நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு கதைகள் கட்டுரை வடிவில் இடம்பெற்றிருப்பது சற்று நெருடலை அளிக்கின்றது. எ.கா. துளசிதாஸர் பற்றிக் கூறும்பொழுது கதையில் வருபவர்கள், தோற்றுவாய், துளசிதாஸரின் இளமை, கூடா ஒழுக்கம், வைராக்கியம், தெய்வ வழிபாடு போன்ற தலைப்புகள் வருகின்றன.
மேலும் அவர்கள் பாடிய பாடல்கள் அவர்களது மொழியிலேயே கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் சுவையை நம்மால் ருசிக்கமுடியவில்லை.


ஆயினும் வாய் வழியிலாக கூறப்பட்டு வந்த கதைகளைத் தேடித் தொடுத்து புத்தகமாக வெளியிட்ட முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பக்தர்களைப் பற்றி அறிய விலை தடையாக இருக்கக் கூடாது என்பதனால் குறைந்த விலையில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.


லிப்கோ பதிப்பகம்
500 பக்கங்கள்
40 ரூ    

Counter
Counter

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது