நான் படித்த புத்தகங்களைப் பற்றி......

my opinion about the various tamil and english novels i read so far

My Photo
Name:
Location: Madurai, Tamil Nadu, India

Sunday, March 05, 2006

DESTINATION UNKNOWN (Agatha Christie)


ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து தலை சிறந்த விஞ்ஞானிகள் ஒவ்வொருவராகக் காணாமல் போகின்றனர். இதன் காரணத்தைக் காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில் பெட்டர்சன் எனும் மற்றொரு விஞ்ஞானியும் தலைமறைவாகிறார். தொடரும் மர்மத்திற்கு விடை தெரிந்த ஒரே நபராகக் காவல்துறை நினைக்கும் ஓலிவ் பெட்டர்சனும் (பெட்டர்சனின் மனைவி) ஒரு விபத்தில் இறக்கிறார்.

கணவனையும் மகனையும் இழந்த ஹிலாரி எனும் பெண் இதே வேளையில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். இதையறந்த காவலதிகாரி, தற்கொலை செய்து கொள்ள புதுமையான வழி ஒன்று உள்ளதாகக் கூறி அவரை ஓலிவாக நடிக்கச் சொல்கிறார். சாகத் துடிக்கும் ஹிலாரி, ஓலிவ் பெட்டெர்செனாக மாறி, தன் வாழ்க்கையின் இறுதி நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது தொடங்கும் பயணமே ‘UNKNOWN DESTINATION’ நாவல்.
புலனாய்வு கதைகளுக்கு பெயர்போன அகாதா கிறிஸ்டின் படைப்பு. இவர் 60 நாவல்கள் மற்றும் ஏராளமான நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவருடைய வழக்கமான புலனாய்வு கதைகளிலிருந்து சற்று வித்தியாசமாக எழுதப்பட்டது இந்நாவல் எனக் கூறலாம். ஆகையால் மார்பில் (Miss Jane Marple), பொய்ரட் (Hercule Poirot), போன்ற அவரது பிரபலமான கதாபாத்திரங்களை இதில் காண முடியாது. 1950 ல் ரஷ்ய நாட்டிற்காக உளவுவேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ப்ரூனோ(Bruno Pontecorvo) மற்றும் ஏமில் ( Klaus Emil Fuchs) எனும் விஞ்ஞானிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.

கதை ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாகச் செல்கிறது. தற்கொலைக்கு முயலும் ஹிலாரியின் மனது மெல்ல மெல்ல மாறி, காதல் வயப்பட்டு வாழவேண்டும் என நினைக்கும் பொழுது அவரது வாழ்வு சாவின் நுனியில் நிற்பது விறுவிறுப்பின் உச்சகட்டம். படிப்போர் ஆவலுடன் எதிர்பார்க்கும் பெட்டர்சன், ஹிலாரியின் முதல் சந்திப்பு நாவலின் திருப்புமுனை எனக் கூறலாம். ஏனென்றால் ஓலிவ் என வந்திருப்பது தன் மனைவி இல்லை என்பதை பெட்டெர்சன் பார்த்த நொடியில் வெளிப்படுத்தினால் ஹிலாரியின் மரணம் அடுத்த நொடியில் ஏற்பட்டுவிடும்.
ஓலிவ் இறக்கும் முன்பு, ஹிலாரியிடம் அவளைத் தனக்கு ஏற்கனவே தெரியும் எனக் கூறுகிறாள். ஆனால் அதற்கான விபரம் தெளிவாக விளக்கப்படவில்லை. அவ்வப்பொழுது வரும் ப்ரென்ச் மொழி வசனங்களைப் புரிந்து கொள்வதும் சற்று சிரமமாக உள்ளது.
அகாதா கிறிஸ்டின் வெற்றிப் படைப்புகளில் இதுவும் ஒன்று.

316 பக்கங்கள்

Counter
Counter

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது